25.06.2021 ஊ.ஓ.தொடக்கப்பள்ளி -கிராமக்கல்விக்குழு கூட்டம்

கூட்டத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிவரை கோரப்பட்டது
இன்று ஊராட்சி ஒன்றியத் தொட்க்கப்பள்ளி அகசிப்பள்ளியில் கிராமக்கல்விக்குழு கூட்டம் சமுக இடைவெளியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் வந்திருந்தனர். கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பரமானந்தம் அவர்கள் தலைமைவகித்தார் . ஆசிரியர் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் கூறும் போது பள்ளிவயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்ககவேண்டும் என்றும்கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்கள் கொண்டு நடத்த இயலாத நிலை ஏற்பட்டது குறித்தும் , இந்த நிலையில் புதிய கல்வியாண்டு பிறந்துள்ளது. பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கவேண்டும் என கூறினார்
கோவிந்தன் மற்றும் ஊர் மணியகாரர் அவர்கள் மாணவர்களுக்கு புத்தகமும் கல்வி தொலைக்காட்சி அட்டவனையையும் வழங்கினர் மாணவர்கள் சமுக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்
அழகுராணி ஆசிரியை நன்றி கூறினார்
இதுசமையம் மாணவர்கள் பெற்றோர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பரமானந்தம். ஊர் கவுண்டர் கோவிந்தராஜ் , கோவிந்தன், பிடிஎ தலைவர் சரவணன் ஊர் ஆகிறோர் கலந்து கொண்டனர்
பள்ளிக்கு முதல்வரின் படம் ஊர்மக்களால் அளிக்கப்பட்டது





































Comments
Post a Comment