அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கண்கானிப்பு குழு கூட்டம் 20.06.2020


கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கணவாப்பட்டி கோவில் சமுதாயக்கூடத்தில் 20-06-2020 ம் தேதி காலை 11 மணி அளவில் அகசிப்பள்ளி ஊராட்சியின் ஊராட்சி அளவிளான கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கண்கானிப்பு குழு  கூட்டம் நடைபெற்றது  கூட்டம் தலைவர் நாராணனன் தலைமையில் நடை பெற்றது கூட்டத்திற்கு தேவசமுத்திரம் மற்றும் அகசிப்பள்ளி பஞ்சாத்துகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். வந்தவர்களை பஞ்சாயத்து செயலர் ராகவன் வரவேற்றார் 
 தேவசமுத்திரம் .பஞ்சாயத்து தலைவர்   வேல்முருகன் உதவி திட்ட அலுவலர் கல்யாண சுந்தரம் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  மற்றும் அகசிப்பள்ளி தலைவர் நாராணனன் மற்றும் அகசிப்பள்ளி துணைத்தலைவி சிந்துபெருமாள். 
கூட்டம் சமுக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு இருந்தனர்



 கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி அவர்கள் கூறும் போது அனைவரும் மாஸ்க் அணிதல் அவசியம் என்றும் அடிக்கடி கை கழுவுதலை கடைபிடிக்கவேண்டும் என்றும்.  
 கூட்டமாக பேசுவது கொரானா பரவலை அதிகரிக்கும் எனவே கூட்டமாக கூட வேண்டாம் என்றும் வெளிமாவட்டத்தில்  இருந்து யாராவது வந்தால் உடன் தகவல் கொடுக்கவும் ,கேட்டுக் கொண்டார் .












 வேட்டியம்பட்டி மகி

 முருகம்மாள் அங்கன்வாடி அவர்கள்  குழுவின் பணி பற்றி கூறினார்
 வெண்ணிலா சத்துணவு அமைப்பாளர் குழுவின் பணி பற்றி கூறினார்

 வார்டு மெம்பர் துரை சாமி வெளியூர்களுக்கு தேவையின்றி செல்லக்கூடாது என கூறினார் 
அகசிப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வன் கொரானாவில் இருந்து  மாணவர்களை காப்பது  பற்றி கூறினார்
 அலுவலர் கல்யாண சுந்தரம் அவர்கள் கொரானா தடுப்பு மற்றும் முன்னெச்சரிகை பற்றி விரிவாக கூறியதாவது.
வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பற்றி உடனடியாக குழு பஞ்சாயத்து தலைவருக்கும் சுகாதார அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி. அவர்கள் வீட்டை விட்டு வெளியே போகாதவாறு பார்த்துக் கொள்ளவும் . அவர்களுக்கு தேவைப்படின் கொரானா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும்.

 தொற்று கண்டறியப்பட்டால் 3 கி.மி சுற்றளவுக்கு கட்டுபாட்டு மண்டலமாக அறிவிக்கபட்டு அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு  சுத்தம் செய்ய வேண்டும் . 
 அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

 ஒலிபெருக்கி மூலமும் தண்டுரா அடித்தும் அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு அரசு கூறியபடி எண்ணிக்கையில் கலந்து கொள்வதை உறுதி செய்தல் வேண்டும் எனவும் கூறினார்




கிருஷ்ணகிரி ஒன்றியத்தில்  உள்ள ஒவ்வோர் ஊராட்சியிலும் ஊராட்சி குழு உறுப்பினர் , ஊராட்சி மன்ற செயலர், கிராம நிர்வாக அலுவலர் , சத்துணவு அமைப்பாளர், அங்கன் வாடி பணியாளர் . முருத்துவ சுகாதா பணியாளர்கள் MGNRES திட்ட பணிதள பொருப்பாளர்கள்  PLF பொறுப்பாளர்கள் மற்ற வி.பி.ஆர்..சி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதய கொரனா பரவல் இருந்து மாவட்டத்தை காக்க இந்த கூட்டம் அனைத்து பஞ்சாயத்திலும் நடக்கும் என்று கூறினார் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் 
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேவசமுத்திரம் செயலர்  ஜெயகுமார் மற்றும்  
 திரு லட்சுமணன் அவர்கள் செய்திருந்தார்கள் 

 அகசிப்பள்ளி ஊராட்சியின் MGNREGS பணி தளம் 2      ல் A P O மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர்  பணியினை பார்வையிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது


Comments