கற்கும் பாரதம் திட்டம் - அகசிப்பள்ளி
பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், நலிவுற்றோர், குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் வகையில் 8.9.2009 முதல் "சக்ஷார் பாரத்” என்ற பெயரில் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் “கற்கும் பாரதம்” என்னும் பெயரில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பெண்களின் எழுத்தறிவு உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு இம்மாவட்டங்களிலிருந்து 17 லட்சத்து 46 ஆயிரம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் 3,152 மையங்களில் 6,304 மையப் பொறுப்பாளர்களால் வார நாட்களில் மாலை 3.00 முதல் 7.00 மணி வரை நடத்தப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில், இத்திட்டத்தின் மூலம் 2 ...