மகாபலி சக்கரவர்த்தியின் கதை - நாடமாக சிவாலயமொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்ததற்காக எலி ஒன்றுக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை சிவபெருமான் வழங்கியதாகவும், அந்த எலியானது மறுபிற ப்பில் மகாபலி எனும் பெயருடன மாமன்னனாக பிறந்து கேரளத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்த போதும், அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டு தோல்வி அடைந்ததால், திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர். மகாபலி மன்னர் ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணணாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் இந்த பூமையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையை கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். எனினும் தனது நாட்டு மக்கள் மிகுந்த அன்பு வைத்திருப்பதாலும், வருடம் ஒரு முறை பாதாளத்தில் இ...